இன்றைய பதிவில் நாம் நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மிக எளிமையாக மற்றும் மிக அழகான பட்டத்தை எப்படி செய்வது என பாப்போம்.
How to Make a kite Tamil
இந்த பதிவை முழுமையாக படித்து உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.
முதலில் இந்த பட்டம் செய்ய தேவையான பொருட்களை பாப்போம்.
1. Kite paper or Normal News Paper - பட்டம் பேப்பர் அல்லது சாதரண நியூஸ் பேப்பர் - 1
2. தென்னக்குச்சி அல்லது தொடப்பக்குச்சி - 4
3. கம் - Fevical Gum or Glue
4. சாதரண நூல்
இந்த நான்கு பொருட்கள் மட்டும் போதுமானது இதை வைத்து மிக அழகான ஒரு பட்டத்தை நம் செய்யலாம்.
How to make a kite at home in tamil
Step 1:
முதலில் கையில் பட்டம் பேப்பர் அல்லது சாதாரண நியூஸ் பேப்பர் ஐ எடுத்து கொள்ளுங்கள். அதை மிக சரியான அளவாக சதுரமாக ( Square Shape ) கட் செய்து வைத்து கொள்ளுங்கள்.
Step 2 :
இரண்டாவதாக நம் கையில் இரண்டு தென்னக்குச்சி எடுத்து கொள்ளுங்கள்.
பொதுவாக நம் தென்னக்குச்சியில் ஒரு பக்கம் மெல்லிசாக மறுபுறம் தடிமனாக இருக்கும்.
Pattam viduvathu eppadi tamil
நம் கையில் உள்ள தென்னக்குச்சியில் ஒரு குச்சியை எடுத்து மற்றோரு குச்சியை தலை கீழாக வைத்து பட்டம் பேப்பர் இல் கம் பயன் படுத்தி நன்றாக ஒட்டிக்கொள்ளுங்கள்.
How to make beautiful kite
Step 3 :
மற்றோரு இரு குச்சியை அதே மாதிரி ஒரு குச்சி மேல் தலை கீழாக வைத்து குச்சியை நன்றாக வளைத்து டேப் வைத்து ஒரு மூன்று பக்கம் ஒட்டிக்கொள்ளுங்கள். அந்த குச்சியை வளைத்து பட்டம் பேப்பர் ஒட்டிக்கொள்ளவும்.
How to make a kite with paper in Tamil
Step 4 :
கையில் இரண்டு இன்ச் இல் அளவில் பேப்பர் எடுத்து அதை பட்டதில் ஒட்டின குச்சியின் மேல் ஒட்டவும்.
Step 5 :
அடுத்ததாக நூல் கட்ட வேண்டும். இதில் தான் நாம் மிக கவனமாக நூலை கட்ட வேண்டும். பட்டத்தின் பிளஸ் குச்சி போன்று ஒரு அமைப்பு இருக்கும் அதில் மேல்புறம் இரண்டு ஓட்டையும். ஒரு ஜான் அளவு எடுத்து கீழே இரண்டு ஓட்டையும் போட்டுக்கொள்ளுங்கள். அதில் இரைட்டை மடிப்பு நூல் அமைத்து அதில் கட்டி கொள்ளவும்.
Step 6 :
இப்போது பட்டம் ரெடி.
டிப்ஸ் :
1. முதலில் நியூஸ் பேப்பர் இல் செய்து பாருங்கள் நண்பர்களே.
2. பட்டம் நன்றாக காய்ந்ததா என பார்த்து கொள்ளுங்கள்.
3. பட்டம் வால் பகுதிக்கு மூன்று பேப்பர் பயன் படுத்தினால் பார்க்க நன்றாக இருக்கும்.
நண்பர்களே இந்த பதிவில் எந்த ஒரு செலவும் இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி ஒரு அழகான பட்டம் செய்வது என பார்த்தோம்.
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்.
நன்றி !!! வணக்கம் !!!
This comment has been removed by the author.
ReplyDeletePost a Comment